Header Ads

test

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழப்பு.

 எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பயாகல பிரதேசத்தில் எரிபொருள் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.

சுகயீனம் காரணமாக களுத்துறை – நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை இந்த நபர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மொரட்டுவை பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுபாடு காரணமாக எரிபொருள் வரிசையில் காத்திருந்து உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகின்றது.

அவற்றில் பல இறப்புகள் திடீர் மாரடைப்பு காரணமாக நிகழ்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.


No comments