கிளிநொச்சியில் குடிநீருக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு.
மின்வெட்டு மற்றும் எரிபொருள் நெருக்கடி காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் 24 மணி நேரமும் சீரான குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அவர்கள் மேலும் குறிப்பிட்டதாவது,
கிளிநொச்சியில் 24 மணி நேர நீர் விநியோகத்தை மேற்கொள்ள இயலாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
நாளாந்தம் ஏற்படுகின்ற மின்சார துண்டிப்பு மற்றும் மாற்று ஏற்பாட்டை மேற்கொள்வதற்கான எரிபொருள் இன்மை போன்றவையே இதற்கான முக்கிய காரணங்கள். இதனால் முன் அறிவித்தலின்றி நீர் விநியோகத்தை துண்டிக்கிற நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகளால் பூநகரி நீர் வழங்கல் திட்டமானது நீரை விநியோகிப்பதில் சிரமங்களை எதிர் நோக்கியுள்ளது.
தினமும் காலை 5 மணிமுதல் காலை 8 மணி வரை நீர் விநியோகம் மேற்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. நீர் விநியோகிப்படுகின்ற சந்தர்ப்பங்களில் பொது மக்கள் நீரினை சிக்கனமாகவும் அத்தியாவசிய தேவைகளுக்கும் பயன் படுத்திக்கொள்ளவும்.
அத்தோடு மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்புகின்ற போது குடிநீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் தெரிவித்துள்ளனர்.
Post a Comment