Header Ads

test

நாட்டில் பால், முட்டை போன்றவற்றுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு

 நாட்டில் பால், முட்டை மற்றும் கோழி இறைச்சி உற்பத்தி கடுமையாக குறைந்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன்படி, திரவ பால் உற்பத்தி 19.8 சதவீதமும், முட்டை உற்பத்தி 34.9 சதவீதமும், கோழி இறைச்சி உற்பத்தி 12.1 சதவீதமும் குறைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலைமைக்கு கால்நடை தீவனம் சரியான முறையில் உற்பத்தி செய்யப்படாமையே பிரதான காரணம் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அதேவேளை இந்நிலையை போக்க மக்காச்சோள உற்பத்திக்கு முன்னுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.


No comments