அரச அதிகாரியான மனைவியை கொடூரமாக வெட்டிக்கொன்ற கணவன்.
லங்காபுர பிரதேச செயலகத்தின் பிரதான நிர்வாக அதிகாரியாக கடைமையாற்றி வந்த பெண்ணை கொலை செய்த சம்பவம் தொடர்பில் அவரது கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது சம்பவம் நேற்று (05) மாலை இடம்பெற்றுள்ளது.கோடாரியால் தனது மனைவியை குறித்த நபர் அடித்து படுகொலை செய்ததாக லங்காபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடந்த 4ஆம் திகதி அதிகாலை 2.30 மணியளவில் தல்பொத்த லங்காபுர வீட்டில் வசித்து வந்த நிர்வாக உத்தியோகத்தரான 41 வயதான யமுனா பத்மினி என்பவரே படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
வீட்டின் மாடி அறையில் தூங்கிய இரண்டு பிள்ளைகளின் தாயான அவர் வெட்டிக் கொல்லப்பட்டிருந்தார்.
யாரோ வீட்டுக்குள் புகுந்து மனைவியை வெட்டியதாகவும், அவர்களுடன் தான் போராடியதாகவும் கணவன் தெரிவித்திருந்தார்.
இருப்பினும், கணவனின் வாக்குமூலத்தில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து நடந்த தொடர் விசாரணையில், கணவன், இன்னொருவருடன் இணைந்து கொலை செய்தது தெரிய வந்துள்ளது.
குடித்துவிட்டு வீட்டுக்கு வர வேண்டாம் என்றும், கடனை அடைக்குமாறும் மனைவி அவரை திட்டியுள்ளார்.
இருவருக்குமிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக கோடரியால் தாக்கியதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
Post a Comment