இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் பலி.
வவுனியா செட்டிகுளம் பகுதியில் இன்று இடம்பெற்ற தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபகரமாக மரணமடைந்துள்ளார்.
இன்று(04) பிற்பகல் கொழும்பில் இருந்து தலைமன்னார் நோக்கி சென்ற தொடருந்து வவுனியா செட்டிகுளம் பகுதியில் சென்று கொண்டிருந்த போது குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்த குடும்பஸ்தர் உடனடியாக மீட்கப்பட்டு செட்டிகுளம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அவர் சிகிச்சை பலனளிக்காது உயிரிழந்துள்ளார்.
Post a Comment