யாழில் 5 பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கு நேர்ந்த துயரம்.
யாழ்ப்பாணத்தில் முதியவர் ஒருவர் மரத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
புலோலி மத்தி – பருத்தித்துறை பகுதியைச் சேர்ந்த 5 பிள்ளைகளின் தந்தையான ஆறுமுகம் நவரட்ணம் (வயது 65) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
குறித்த முதியவர் கடந்த வெள்ளிக்கிழமை (01-07-2022) உறவினர் ஒருவருடைய காணியில், ஏணியை வைத்து தேங்காய் பறிக்க மரத்தில் ஏற முற்பட்ட வேளை, ஏணியுடன் கீழே விழுந்துள்ளார்.
இதையடுத்து, மந்திகை ஆதார வைத்தியசாலையில் குறித்த நபர் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக மறுநாள் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்றைய தினம் (06-07-2022) உயிரிழந்துள்ளார்.
இந்த மரண விசாரணையை யாழ். போதனா வைத்தியசாலை தீடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
Post a Comment