வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட நான்கு பிள்ளைகளின் தந்தை.
மட்டக்களப்பு ஏறாவூர் - ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து கடற்தொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மட்டக்களப்பு ஏறாவூர் - ஆறுமுகத்தான்குடியிருப்பு வாவியிலிருந்து கடற்தொழிலாளர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை மீட்கப்பட்ட இந்தச் சடலம் ஆறுமுகத்தான்குடியிருப்பு துரைச்சாமி வீதியை அண்டி வசிக்கும் நான்கு பிள்ளைகளின் தந்தையான சின்னத்துரை ஸ்ரீதரன் (வயது 51) என்பவருடையது என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
வழமை போன்று தனியாகவே வாவியில் இரவு நேர மீன்பிடிக்குச் செல்லும் குறித்த நபர், நேற்று மாலை தோணியில் வாவிக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
எனினும், இன்று காலை அவரது சடலம் வாவியில் மிதப்பதைக் கண்டு மக்கள் மீட்டு கரைக்குக் கொண்டு வந்து சேர்ப்பித்துள்ளனர்.
நேற்று மாலை வாவியில் பலத்த காற்று வீசியது எனத் தெரிவிக்கும் மக்கள், அதன் காரணமாக தோணி கவிழ்ந்து அந் நபர் வாவியில் வீழ்ந்து மூழ்கியிருக்கக் கூடும் எனவும் தெரிவிக்கின்றனர்.
இச் சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
Post a Comment