கிளிநொச்சியில் பாவனையாளர் அதிகார சபையின் அதிரடி நடவடிக்கை.
கிளிநொச்சி மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை உத்தியோகத்தர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் அரிசி ஆலைகள், மற்றும் அரிசி விற்பனை நிலையங்களில் திடீர் சோதனை நடவடிக்கை ஒன்றை நேற்றையை தினம் முன்னெடுத்திருந்தனர்.
இச் சோதனை நடவடிக்கையின் போது கட்டுப்பாட்டு விலையிலும் பார்க்க அதிக விலையினை பொறித்த அல்லது காட்சிப்படுத்திய அரிசி ஆலை உரிமையாளர்கள், மற்றும் கூடிய விலையில் அரிசியை விற்பனை செய்த விற்பனையாளர்களுக்கு எதிராகவும், விலை காட்சிப்படுத்தாது அரிசி விற்பனையில் ஈடுபட்ட வர்த்தகர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment