இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி.
மொரட்டுவை – கட்டுபெத்த சந்தியில் இன்று (29) முற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சுமார் ஒரு மாத காலப்பகுதியில் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் 10 மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதில் அதிகளவான மரணங்கள் களனி 2பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன.
குறித்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கான காரணம் வெளியாகாத நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டுள்ளனர்.
Post a Comment