லாப் நிறுவனம் வெளியிட்டுள்ள மகிழ்ச்சியான செய்தி.
சந்தைக்கு தேவையான எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள வரிசை நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் லாப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்போதைய நிலையில், 3 400 மெட்ரிக் தொன் எரிவாயு சிலிண்டர்கள் விநியோக நடவடிக்கைகளுக்காக தயார்ப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மாவட்டங்களின் அடிப்படையில் உரிய விலை பட்டியலும் விநியோகிக்கப்பட்டுள்ளதாக குறித்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
Post a Comment