Header Ads

test

உணவு வழங்க தாமதமாகியதால் கோடாரியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன்.

 கோடாரியால் தாக்கி மனைவியை கொலை செய்த கணவன் இன்று அதிகாலை நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தாக நுவரெலியா பொலிஸ் தலைமையகத்தின் பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரேமலால் ஜயசேகர தெரிவித்துள்ளார்.

நுவரெலியா பொலிஸ் பிரிவின் ஒலிப்பெண்ட் தோட்டத்தின் மேற்பிரிவில் வசித்து வந்த 26 வயதான சுப்ரமணியம் சத்தியவாணி என்ற 26 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயே சம்பவத்தில் கொல்லப்பட்டுள்ளார்.

கணவனுக்கு உணவை எடுத்து வர சென்ற மனைவி உணவை எடுத்து வருவது தாமதமாகியுள்ளது.அப்போது கணவன், மனைவியை தேடிய போது அவர், தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததை கண்ட கணவனுக்கு கோபம் ஏற்பட்டுள்ளது.

இதனால், இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் வாக்குவாதம் முற்றியதால், இந்த கொலை நடந்ததாகவும் கணவன் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

உயிரிழந்த பெண்ணுக்கு 7 மற்றும் 3 வயது மகள்கள் இருப்பதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சரணடைந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.


No comments