Header Ads

test

விசேட அதிரடிப்படையினரின் சுற்றி வளைப்பில் சிக்கிய பல கோடி நாணயங்கள்.

 இலங்கையில் சட்ட விரோத பணப்பறிமாற்றம் இடம்பெற்ற 4 இடங்களை விசேட அதிரடிப்படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு, கோடிக்கணக்கில் இலங்கை பணமும், இலட்சக்கணக்கான வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.  

மேலும் இந்த சம்பவத்தின் போது, கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த சுற்றி வளைப்பு நடவடிக்கை விசேட அதிரடிப்படையினரின் கோனஹேண முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமையவே முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் வெள்ளவத்தை, கொழும்பு-15, புதுக்கடை மற்றும் கொழும்பு-10 ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவார்கள்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இந்த சுற்றிவளைப்பில் ஒரு கோடியே 86 இலட்சத்து 95 ஆயிரம் ரூபா இலங்கை பணம், 4 இலட்சத்து 32 ஆயிரத்து 502 ரூபா பெறுமதியுடைய வெளிநாட்டு பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த வெளிநாட்டு பணத்தில் 10 ரூபாய் இந்திய பணத்தாள்கள் 16, 20 ரூபா 6, ஒரு குவைத் தினார் தாள்கள் 7, 100 கட்டார் தினார் ஒன்றும், 50 சிங்கப்பூர் டொலர் தாள் ஒன்றும், 100 அமெரிக்க டொலர் தாள்கள் 9, 200 யூரோ ஒன்றும் உள்ளடங்குகின்றன.

மேலும், இவை தவிர 4 கையடக்கத்தொலைபேசிகளும், இரு கொடுக்கல் வாங்கல் ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments