முல்லைத்தீவு மாவட்டத்தில் பாடசாலை அதிபர் ஒருவரின் முன்மாதிரியான செயற்பாடு.
முல்லைத்தீவு மாவட்டத்தில் யுத்தத்தின் பிடியில் சிக்குண்டுபோன துணுக்காய் கல்வி வலயத்தில் பல பின் தள்ளப்பட்ட கிராமங்கள் காணப்படுகின்றன.
இவ்வாறான பிரதேசத்தில் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தள்ளப்பட்ட குடும்பங்களே அதிகம் காணப்படுவதை இங்கு அவதானிக்க முடிகின்றது.
அதாவது,இவ்வாறான சூழ்நிலையிலும் துணுக்காய் வலயத்தில் காணப்படும் முன்மாதிரியான பாடசாலையாக மு.அணிஞ்சியன்குளம் தமிழ் கலவன் பாடசாலை திகழ்கிறது.
இப் பாடசாலை அதிபரின் முன் மாதிரியான செயற்பாடுகள் காரணமாக,பாடசாலை கணிசமான வளர்ச்சியை தற்போது கண்டு வருவதோடு,புலைமைப்பரிசில் பரீட்சையில் அதிகளவான மாணவர்கள் சித்தி எய்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது,
குறித்த பாடசாலையில் கடந்த 23.06.2022 அன்று ஏழுதிறன் வகுப்பறைகளும் மற்றும் மதில் தொகுதியும் திறந்துவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வானது பாடசாலையின் அதிபர் திரு.தங்கராசா நிமலன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றதோடு, இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வட மாகாண கல்விப் பணிப்பாளர் திரு.செல்லத்துரை உதயகுமார்அவர்களும் சிறப்பு விருந்தினராக துணுக்காய் கல்வி வலயப் பணிப்பாளர் திருமதி.மாலினி முகுந்தன், மற்றும் கெளரவ விருந்தினராக திரு.தவராஜா பிரதாப் (உப தலைவர்,HC 97 அறக்கட்டளை) அவர்களும் கலந்துகொண்டதோடு பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி ஶ்ரீஸ்கந்தராசா அவர்களும் கலந்துகொண்டுள்ளார்.
இப் பாடசாலையில் இடம்பெற்ற குறித்த செயற்பாட்டுக்கு, புலம்பெயர் தேசத்து உறவுகளும் கல்வி அமைச்சும் மற்றும் HC97 அறக்கட்டளையும் 2020 ஆண்டு கல்வி கற்ற தரம் 5 பழையமாணவர்களின் பெற்றோரும் நிதிப்பங்களிப்பு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் பாடசைலையின் முதன்மை செயற்பாடுகள் காரணமாக பல்வேறுபட்ட பகுதிகளிலிருந்தும், குறிப்பாக மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியிலிருந்தும் அதிகளவான மாணவர்கள் இங்கு கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment