Header Ads

test

கொழும்பில் பெரும் சோகத்தை ஏற்படுத்திய யுவதியின் மரணம்.

 ஹோமாகம - மாகம்மன பிரதேசத்தில் இரண்டு மாடி வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் கணவன், மனைவி உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் பெண் பிள்ளைகள் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த தீ விபத்து சம்பவம் கடந்த 25 ஆம் திகதி  இடம்பெற்றிருந்த நிலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் படுகாயமடைந்திருந்தனர்.

இதில் தாய் மற்றும் தந்தை கடந்த ஞாயிற்றுக் கிழமையன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில் ஒரு மகள் கொழும்பு தேசிய வைத்தியசாலையிலும் மற்றைய மகள் கொழும்பு ரிஜ்வே சிறுவர் வைத்திசாலையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 19 வயதுடைய யுவதி நேற்று (28-06-2022) மதியம் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்த யுவதியின் தாய், தந்தையின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.



No comments