பள்ளிவாசல் அருகில் குழந்தை ஒன்றை கடத்த முயற்ச்சித்த நபரை மடக்கிப் பிடித்த பொது மக்கள்.
சம்மாந்துறை புஸ்றா மஹல்லா பள்ளிவாசல் அருகில் இன்று(29) குழந்தை ஒன்றினை கடத்த நபரொருவர் முயற்சித்துள்ளார்.
இதன்போது பொதுமக்கள் குறித்த நபரை மடக்கி பிடித்து சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இந்த குழந்தை கடத்தல் சம்பவம் தனி நபரால் மேற்கொள்ளப்பட்டதா,அல்லது ஒரு குழுவால் மேற்கொள்ளப்பட்டதா, என்ற தகவல்கள் தொடர்பில் சம்மாந்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment