Header Ads

test

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்.

 எரிபொருளை விநியோகம் செய்வதற்கு டோக்கன் முறையை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த வேலைத்திட்டம் திங்கட்கிழமை (27) முதல் நடைமுறைக்கு வரும் எனவும், இந்தச் செயற்பாடுகள் சுமூகமாக நடைபெறுவதை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை காவல்துறை மற்றும் இலங்கை இராணுவத்தினரின் உதவிகள் பெறப்படும் எனவும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தாமதமான எரிபொருள் இறக்குமதி குறித்த சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளித்த அமைச்சர், பெட்ரோல், டீசல், கச்சா எண்ணெய் மற்றும் ஜெட் எரிபொருள் இறக்குமதியில் அமைச்சகத்தின் நான்கு தனித்தனி குழுக்கள் செயல்படுகின்றன என்றும் கூறினார்.

இலங்கைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கான 130 க்கும் மேற்பட்ட முன்மொழிவுகளில் குழுக்கள் பணியாற்றி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார். 

அத்துடன் நாளைய தினம் இரண்டு அமைச்சர்கள் ரஷ்யாவுக்கு பயணிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதன்போது எரிபொருள் குறித்தும் விரிவாக கலந்துரையாடப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். 


No comments