யாழில் சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்.
யாழ்ப்பாணத்தில் காணாமல்போனதாக கூறப்படும் சிறுமி ஒருவர் கிளிநொச்சிப் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸாரினால் சிறுமி மீட்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணம் இராசாவின் தோட்ட வீதியில் வசிக்கும் சிறுமி,கடந்த வெள்ளிக்கிழமை யாழ்ப்பாண நகரப் பகுதிக்கு தனது தேவைக்காக சென்றவேளை கும்பலொன்றினால் கடத்திச் செல்லப்பட்டு கிளிநொச்சியில் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டாரென சிறுமியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு இது பற்றி முறைப்பாடு அளித்த போதும் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லையென சிறுமியின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதனால் வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் முறைப்பாட்டினை தெரிவித்ததாகவும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி வழங்கப்படவேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இது தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு உறவினர்களால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்.நகரை அண்மித்த பகுதியை சேர்ந்த இரு இளைஞர்களை கைது செய்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment