Header Ads

test

சட்டவிரோதமாக கடல் வழியாக செல்ல முயற்சித்த இலங்கையர்கள் அதிரடி கைது.

 சட்டவிரோதமாக கடல் வழியாக இலங்கையில் இருந்து வெளிநாட்டுக்கு செல்ல முயற்சித்தனர் என சந்தேகிக்கப்படும் 64 பேரை கடற்படையினர், கிழக்கு கடற்பரப்பில் இன்று மேற்கொண்ட விசேட தேடுதலில் கைது செய்துள்ளனர்.

திருகோணமலைக்கு தொலைவில் கடற்பரப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் சந்தேகத்திற்கிடமான இலங்கையின் ஆழ்கடல் மீன்பிடி படகு ஒன்றை அவதானித்துள்ளதுடன் அதனை சோதனையிட்டுள்ளனர்.

11 பெண்கள் மற்றும் 3 சிறார்கள்,இதன் போது படகில் இருந்த கடல் வழியாக வெளிநாட்டுக்கு ஆட்களை அழைத்துச் செல்லும் வியாபாரத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 7 பேர் உட்பட 50 ஆண்கள், 11 பெண்கள், மூன்று பிள்ளைகள் உட்பட 64 பேர் ஆழ்கடல் மீன்பிடி படகுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், திருகோணமலை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக திருகோணமலை துறைமுகம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

இந்த நிலையில், சட்டவிரோத குடியேற்றத்துடன் சம்பந்தப்பட்ட நபர்களின் மோசடியான தந்திரங்களில் சிக்கி சட்டவிரோதமாக மற்றும் மிகவும் ஆபத்தான முறையில் இலங்கையில் இருந்து செல்ல முயற்சித்து, சட்டத்திற்கு முன்னால் குற்றவாளிகளாக மாறுவதை தவிர்க்குமாறு கடற்படையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.

அத்துடன் சட்டவிரோத குடியேற்றவாசிகளை அழைத்துச் செல்லும் நபர்கள் நீண்ட பயணத்திற்காக பயன்படுத்தும் ஆழ்கடல் மீன்பிடி படகுகள் உகந்தவை அல்ல என்பதும் கண்டறியப்பட்டுள்ளன.

இந்த படகுகள் மூலம் சட்டவிரோதமாக கடல் வழியாக வெளிநாடுகளுக்கு செல்வது அதிகளவான உயிராபத்துக்களை ஏற்படுத்தலாம் எனவும் கடற்படையினர் எச்சரித்துள்ளனர்.





No comments