மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இடம்பெற்ற கோரச் சம்பவம்.
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில், மன்னார் - நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த நபரே பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Post a Comment