எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி புகையிரத திணைக்கள ஊழியர்கள் முன்னெடுத்துள்ள போராட்டம்.
புகையிரத திணைக்கள ஊழியர்கள் எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு கோரி போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்து வரும்நிலையிலே தற்போது இப்போராட்டமும் முன்னெடுக்கப்படுகின்றது.
இப் போராட்டத்தை மறித்து பொலிஸார் வீதி தடைகளை ஏற்படுத்தி வருவதோடு ஆர்பாட்டங்காரர்கள் தொடர்ந்தும் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமான இப் போராட்டமானது தற்போது ஜனாதிபதி மாளிகையை நோக்கி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இன்று காலை ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் சத்தம் வீதியிலும் (Chatham street colombo) அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
எனவே தற்போது இவ்விரு போராட்டக்காரர்களும் ஒன்றாக இணைந்து அரசாங்கத்திற்கு எதிரான போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Post a Comment