இலங்கையில் இடம்பெறும் நூதனமான திருட்டு.
சிலாபத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இன்ஜினில் இருந்து டீசலை திருடிய குற்றச்சாட்டில் புகையிரத ஊழியர் ஒருவரை இன்று காலை சிலாபம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சிலாபம் புகையிரத நிலையத்தில் கடமையாற்றும் உதவி புகையிரத தொழில்நுட்ப உத்தியோகத்தர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபரிடம் இருந்து 15 லீற்றர் டீசலையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இன்று காலை கொழும்பு நோக்கிச் செல்லும் புகையிரதத்தின் இயந்திரம் சிலாபம் புகையிரத நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், இன்ஜினில் இருந்த எரிபொருளை சந்தேக நபர் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
புகையிரத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பொலிஸாருக்கு வழங்கிய முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் கைதான சந்தேக நபர் சிலாபம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
Post a Comment