Header Ads

test

வவுனியாவில் ஹாட்வெயார் ஒன்றில் பதுக்கிவைத்த 3000 லீற்றர் டீசல் மீட்பு.

 வவுனியா, வேப்பங்குளம் பகுதியில் உள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் விசேட சோதனை நடவடிக்கையின் போது இன்று (27.06) மதியம் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் பொலிசார் தெரிவித்தனர். 

வவுனியா விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலையடுத்து நெளுக்குளம் பொலிசார் வவுனியா, மன்னார் வீதி, வேப்பங்குளம் பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹாட்வெயார் ஒன்றினை சோதனை செய்தனர். இதன்போது குறித்த ஹாட்வெயாரின் களஞ்சியசாலைப் பகுதியில் 15 பெரல்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3000 லீற்றர் டீசல் கண்டு பிடிக்கப்பட்டது. 

இதனையடுத்து குறித்த 15 பெரல்களில் காணப்பட்ட 3000 லீற்றர் டீசல்களும் நெளுக்குளம் பொலிசாரால் மீட்கப்பட்டதுடன், அதனை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஹாட்வெயாரின் களஞ்சிய பகுதியில் கடமையாற்றும் 33 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த நபரிடம்  மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ள நெளுக்குளம் பொலிசார் விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர். 


No comments