Header Ads

test

மத்திய வங்கியிடம் பணம் இல்லை - பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிருப்தி.

மத்திய வங்கியிடம் ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை என தெரிவித்த பிரதமர் ரணில், நாங்கள் கடன்களை எவ்வாறு திருப்பிச் செலுத்தப்போகின்றோம் என்பது குறித்து எங்களிடம் திட்டம் எதுவுமில்லை எனவும் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

கடன்களை திருப்பி செலுத்துவதற்கான அரசாங்கத்தின் திட்டம் குறித்து ஹர்சா டி சில்வா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே பிரதமர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

உண்மையை தெரிவிக்கவேண்டும்,மத்தியவங்கியிடம் ஒரு மில்லியன் டொலர்கள் கூட இல்லை எங்கிருந்து பணத்தை பெறுவது என்பது தெரியாத நிலையில் நாங்கள் உள்ளோம்.

நான் பொருளாதார மீட்பு குழுவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ளவுள்ளேன்.அத்துடன் உங்கள் ஆலோசனைகளை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அதேசமயம் உலகவங்கியிடமிருந்து 160 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளன. அதனை எப்படி பயன்படுத்தலாம் என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்த பிரதமர், பெட்ரோலிய பொருட்களை இந்த பணத்தை பயன்படுத்தி கொள்வனவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


No comments