புகையிரதத்தில் மோதி சிறுமியொருவர் உயிரிழப்பு.
தென்னிலங்கையில் ஏழு வயது சிறுமியொருவர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் கொஸ்கொட, பியதிகம பிரதேச புகையிரத பாதையில் இன்று காலை நடைபெற்றுள்ளது.
புகையிரத தண்டவாளத்தைக் கடக்க முயன்ற சிறுமியொருவரே இவ்வாறு புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment