அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது.
அட்டுலுகம சிறுமியின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.
இதேவேளை பிரேத பரிசோதனை அறிக்கையும் வெளியாகியுள்ளது.
குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அட்டுலுகம பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியின் மரணம் தொடர்பில் 29 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர், சிறுமியின் உறவினர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இருவர் இதற்கு முன்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
சந்தேக நபர்களில் ஒருவர் கீரை தோட்ட தொழிலாளி எனத் தெரிய வந்துள்ளது. குறித்த நபரின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் சேறு படிந்திருந்த சாரம் ஒன்றையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சிறுமியின் பிரேத பரிசோதனைக்காக 3 சட்ட வைத்திய அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த நீதவான் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளார்.
இதற்கமைய, சிறுமியின் சடலத்தின் மீதான பிரேத பரிசோதனை பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் இடம்பெறுகிறது.
இன்றைய தினம் மேற்கொள்ளப்படும் பிரேத பரிசோதனையை அடுத்து முழுமையான அறிக்கை சமர்பிக்கப்படும் என பண்டாரகமை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment