லங்கா சதொச நிறுவனத்தில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலை.
சதொச நிறுவனத்திலும் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வர்த்தக அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
கொள்முதல் முறையில் உள்ள சில காரணிகளே இதற்குக் காரணம் என்று அமைச்சர் கூறினார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் பாரிய சிரமங்களை எதிர்நோக்கியிருக்கின்றனர்.
இந்த நிலையில், அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாக சதொச நிலையத்தில் சற்று குறைவான விலையில் பொருட்கள் கொள்வனவு செய்து வந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment