யாழில் மாற்றுதிறனாளி ஒருவரின் முச்சக்கரவண்டி மீது தமது கைவரிசையை காட்டிய திருடர்கள்.
முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட மாற்றுதிறனாளி ஒருவரின் முச்சக்கரவண்டி யாழில் திருடர்களால் களவாடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
குறித்த நபர் தனது மாதாந்த மருத்துவ சிகிச்சைக்காக முச்சக்கரவண்டியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இன்றைய தினம் (03) சென்றுள்ளார்.
அதாவது,சிகிச்சை பெறுவதற்கு செல்ல முன்பதாக தனது PZ 0305 (பச்சை நிறம்) என்ற இலக்கமுடைய முச்சக்கரவண்டியை
வைத்தியசாலையின் அருகிலுள்ள விக்டோரியா (Victoria ) வீதியில் நிறுத்தி வைத்துள்ளார்.
குறித்த நபர் சிகிச்சை பெற்று வந்ததன் பின்னர் தனது முச்சக்கரவண்டி தரித்து விடப்பட்ட பகுதியில் காணப்படாமையால் பல இடங்களிலும் தேடியுள்ளார்.
இதன் பின்னர் இன்று (03) முற்பகல் 11.00மணிக்கும் 2.00க்கும் இடையில் தனது முச்சக்கரவண்டி திருட்டுப் போயுள்ளதை உணர்ந்துள்ளார்.
குறித்த முச்சக்கரவண்டியை யாரேனும் கண்டால் 0764046965 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் வழங்குமாறு பாதிக்கப்பட்ட நபர் கேட்டுக்கொண்டுள்ளார்.
Post a Comment