Header Ads

test

அரிசி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி வெளியீடு.

   நுகர்வோர் விவகார அதிகார சபை (CAA) உள்ளூர் அரிசி வகைகளுக்கான அதிகபட்ச சில்லறை விலையை அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளது.

அதன்படி ஒரு கிலோ சிவப்பு நாட்டரிசி ரூ. 220, ஒரு கிலோ வெள்ளை அல்லது சிவப்பு சம்பா ரூ. 230 மற்றும் ஒரு கிலோ கீரி சம்பா ரூ. 260 என வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடிநுகர்வோர் விவகார அதிகார சபை சுற்றிவளைப்புகளை மேற் கொள்ளவுள்ளனர்.

அத்துடன், அவ்வாறான வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரான மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) சாந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.


No comments