ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் அரசுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட பாரிய போராட்டம்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஏற்பாட்டில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு திருகோணமலையில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் கிரிஷாந்தன் தலைமையில் அரசியல் நிலைமையைச் சரியான முறையில் நிறுவுங்கள் எனும் தொனிப்பொருளில் திருகோணமலை பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்பாக இன்று (01) காலை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் இன்று உலகளாவிய ரீதியில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்படுகின்ற நிலையில், நாட்டில் பெரும்பாலான தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமையை வென்றெடுக்கும் சந்தர்ப்பம் இதுவரை கிடைக்கவில்லை எனவும் மக்களின் ஆணையை ஏற்று ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆட்சியாளர்கள் மக்களின் ஆணைப்படி ஜனாதிபதி உட்படப் புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் என அனைவரும் தமது பதவிகளை ராஜினாமா செய்து வீடு செல்ல வேண்டும் எனவும் இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக குறை, தோல்வியடைந்த அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும், 21ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்து,அத்தியாவசிய உணவுப் பொருட்களைத் தங்குதடையின்றி வழங்கு, உயிர் தரும் மருந்து தட்டுப்பாடுகளுக்கு உடனடி தீர்வு காண் மற்றும் பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை உடனடியாக பதவி விலகு என்ற பதாதைகளை ஏந்தியவாறு அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.
Post a Comment