யாழில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழப்பு.
யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதியில் இன்று இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குளிரூட்டி ரயிலுடன் மோதியே குறித்த நபர் உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் அதே இடத்தை சேர்ந்த ம.அரவிந்தன் (வயது28) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கின்றார்.
பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முயன்றபோது யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற கடுகதி புகையிரதம் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக கூறப்படும் நிலையில் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் அப்பகுதி காணப்படும் பாதுகாப்பற்ற ரயில் கடவையால் அடிக்கடி விபத்துக்கள் இடம்பெறுவதாகவும் தமக்கு பாதுகாப்பான ரயில் கடவையை அமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேசவாசிகள் புகையிரதத்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது .
Post a Comment