Header Ads

test

ஊரடங்கு உத்தரவு தொடர்பில் வெளிவந்த தகவல்.

 நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு நாளை (15) காலை 5 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் மாலை 6.00 மணிக்கு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப்பகுதியில் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியினால் வழங்கப்பட்ட எழுத்துப்பூர்வ அனுமதியின்றி பொது வீதி, புகையிரத பாதை, பொது பூங்கா, பொது விளையாட்டு மைதானம் அல்லது கடற்கரையில் தங்குவதற்கு மற்றும் நடமாடுவதற்கு அனுமதி இல்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள காலப் பகுதியிலும் இரவு 7 மணி வரை தனியார் சிகிச்சை நிலையங்கள் மற்றும் ஒசுசல உள்ளிட்ட மருந்து விநியோக நிலையங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயக அலுவலகம் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


No comments