ஏலத்தில் விடப்படவுள்ள இலங்கை மத்திய வங்கியின் உண்டியல்கள்.
எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று ஏலவிற்பனையினூடாக 83,000 மில்லியன் ரூபாவுக்கான திறைசேரி உண்டியல்கள் ஏலத்தில் விடப்படவுள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இதன்படி, 91 நாட்களில் முதிர்வடையும் 40,000 மில்லியன் உண்டியல்களும், 182 நாட்களில் முதிர்வடையும் 23,000 மில்லியன் உண்டியல்களும், 364 நாட்களில் முதிர்வடையும் 20,000 மில்லியன் உண்டியல்களும் ஏலத்திற்கு விடப்பப்படவுள்ளன.
அரசாங்கப் பிணையங்களில் உள்ள முதனிலை வணிகர்களிடம் இருந்து விலைக்குறிப்பீடுகள் கோரப்படுகின்றன.
இலங்கை மத்திய வங்கியால் வழங்கப்பட்ட இலத்திரனியல் விலைக்குறிப்பீட்டு வசதியூடாக மட்டுமே விலைக்குறிப்பீடுகள் அனுப்பப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment