Header Ads

test

நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வாகனத்தால் அநியாயமாக கொல்லப்பட்ட மனித உயிர்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்றி ரஹீமுக்கு சொந்தமான ஜீப் வண்டியில் மோதுண்டு ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாலாவி - கல்பிட்டி வீதியின் மாம்புரி பிரதேசத்தில் நேற்றிரவு இந்த விபத்து நடந்துள்ளது.

இந்த விபத்து இடம்பெற்ற  போது நாடாளுமன்ற உறுப்பினர் குறித்த வாகனத்தில் பயணித்துள்ளார். சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சாரதியின் கவனமின்மை காரணமாக இந்த விபத்து நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.



No comments