கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை தொடர்பில் வெளிவந்த தகவல்.
கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் வினாத்தாள்களுக்கு விடையளிக்கும் நேரத்தில் முகக்கவசம் அணிய வேண்டியது கட்டாயமில்லை என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தர்மசேன விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. கல்விப் பொதுத்தராதார சாதாரண தர பரீட்சை எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் ஜூன் மாதம் முதலாம் திகதி வரை நடைபெறவுள்ளது அத்துடன் பரீட்சார்த்திகள் பரீட்சை நிலையத்திற்கு பிரவேசிக்கும் போதும் மற்றும் வெளியேறும் போதும் முகக்கவசம் அணிந்திருப்பது கட்டாயம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பாடசாலை பரீட்சார்த்தி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியிருப்பின் அதிபர் ஊடாக பரீட்சை மத்திய நிலையத்துக்கு அறிவிக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கொரோனா தொற்றுக்குள்ளான பரீட்சார்த்திகள் தனி அறையில் பரீட்சைக்கு தோற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
Post a Comment