Header Ads

test

காணாமல் போன சிறுமி சடலமாக மீட்பு.

 காணாமல் போன 9 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.பண்டாரகம - அட்டலுகம பகுதியில் வைத்து நேற்றைய தினம் குறித்த சிறுமி காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.  

குறித்த சிறுமியின் சடலம் அவரது வீட்டுக்கு அருகில் உள்ள சதுப்பு நிலம் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது. சேற்றுக்குள் அமிழ்த்தி வைக்கப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அட்டலுகம,  பிரதேசத்தைச் சேர்ந்த ஒன்பது வயதான சிறுமி பாத்திமா ஆயிஷா நேற்று வீட்டுக்கு அருகில் இருக்கும் கோழிக்கடைக்குச் சென்று திரும்பும் வழியில் காணாமல் ​போயிருந்தார்.

காணாமல் போன அட்டலுகம சிறுமி சடலமாக மீட்பு (Photo)

இந்த நிலையில் சிறுமி காணாமல் போனதாக நேற்றைய தினம் செய்யப்பட்ட முறைப்பாட்டினை அடுத்து பொலிஸார் தீவிர தேடுதல் மேற்கொண்டனர். 

சிறுமியைத் தேடிக் கண்டுபிடிப்பதற்காக பொலிஸ் மோப்ப நாய்கள் சகிதம் நான்கு விசாரணைக் குழுக்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தன. 

இந்நிலையில் அவர் வான் ஒன்றில் கடத்தப்பட்டதாகவும், புறக்கோட்டையில் இன்னொரு பெண்ணுடன் காணப்பட்டதாகவும் பல்வேறு தகவல்கள் பரவியிருந்தன. 

 இதனையடுத்து, தற்போது சிறுமி அவரது வீட்டில் இருந்து 150 மீட்டர் தொலைவில் உள்ள சதுப்பு நிலத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 



No comments