நபர் ஒருவர் கோடரியால் வெட்டிக்கொலை.
அம்பாறை- அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் ஆண் ஒருவர் கோடரியால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கோடரியுடன் கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெறு வருகின்றன.
இதைத்தவிர, கைபேசி செயலியை பயன்படுத்தி பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை கிழக்கைச் நேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.
Post a Comment