நாடாளுமன்ற வளாகத்தில் புதிதாக உருவாகிய ஹொரு கோ கம.
அரசாங்கத்திற்கு எதிராக கோட்டா கோ கம மற்றும் மைனா கோ கம உருவாகியுள்ள நிலையில், தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் ஹொரு கோ கம உருவாகியுள்ளது.
நாட்டில் பெரும் பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில், அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.
ஜனாதிபதி செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், அந்த பகுதியில் கோட்டா கோ கம என்ற மாதிரி கிராமமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அதேபோல், அலரி மாளிகையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் அந்த பகுதியில் மைனா கோ கம என்ற மாதிரி கிராமத்தை உருவாக்கியுள்ளனர். இந்த பின்னணியில் தற்போது நாடாளுமன்ற வளாகத்தில் ஹொரு கோ கம என்ற மாதிரி கிராமம் உருவாக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியை அண்மித்து பல்கலைக்கழக மாணவர்களினால் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்ட நிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் நடத்தியிருந்தனர்.
மேலும், நேற்றிரவு முதல் நாடாளுமன்ற வளாகத்தை அண்மித்த வீதி முழுமையாக மூடப்பட்டிருந்தது. இன்றைய ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸாரினால் அமைக்கப்பட்ட இரும்பு கம்பிகளுடனான வேலிகளை மாணவர்கள் உடைத்தெறிந்திருந்தனர்.
இவ்வாறான பின்னணியில், நாடாளுமன்ற வளாகத்தில் தற்போது ஹொரு கோ கம என்ற பெயரிலான மாதிரி கிராமம் அமைக்கப்பட்டுள்ளது.
Post a Comment