Header Ads

test

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறார்களுக்கு நேர்ந்த துயரம்.

 அக்கரைப்பற்று - இறக்காமம் - வாங்காமம் பகுதியில் உள்ள ஆற்றில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 சிறார்கள், நீரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நேற்று பிற்பகல் ஆற்றில் நீராடச் சென்ற 2 சிறுவர்களும், நீரில் இழுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, பிரதேசவாசிகள் அவர்களை மீட்டு அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இந்தநிலையில், குறித்த சிறுவர்கள் உயிரிழந்தாக காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமியும், 6 வயது சிறுவனும் இதன்போது உயிரிழந்ததாகவும், சம்பவம் தொடர்பில் இறக்காமம் காவல்துறை மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தது.


No comments