முள்ளிவாய்க்கால் பகுதியில் கிணற்றிலிருந்து மீட்க்கப்பட்ட இளைஞர் ஒருவரின் சடலம்.
முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் கடற்றொழிலில் ஈடுபட்ட இளைஞரொருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று 03.05.2022 இடம்பெற்றுள்ளது.
திருகோணமலையினை சேர்ந்த 37 அகவையுடைய பிரதாப் என்ற இளைஞர் கடற்றொழிலுக்காக முள்ளிவாய்க்காலில் வாடியில் தங்கி நின்று தொழில் செய்துவந்துள்ளார்.
குறித்த நபருக்கு வலிப்பு நோய் ஏற்படுவதாகவும் கிணற்றிற்கு சென்ற வேளை வலிப்பு ஏற்பட்டு கிணற்றில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Post a Comment