Header Ads

test

பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி இராஜினாமா தொடர்பில் பட்டாசு கொழுத்தி ஆரவாரம்.

 பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவியை இராஜினாமா செய்ததாக வெளியான தகவலையடுத்து, அலரி மாளிகைக்கு முன்பாக பட்டாசுகள் கொளுத்தி போராட்டக்காரர்கள் ஆரவாரம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மகிந்த ராஜபக்ச தனது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், அவை உண்மைக்கு புறம்பான தகவல் என பிரதமர் அலுவலகம் மறுப்பு தெரிவித்திருந்தது.


இந்நிலையில், அலரிமாளிகைக்கு முன்பாக கடந்த சில நாட்களாக மைனா கோ கம என்ற பெயரில் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில்,மகிந்த தொடர்பில் வெளியான போலி தகவலையடுத்து பட்டாசு கொளுத்தி போராட்டக்காரர்கள் ஆரவாரம் செய்துள்ளனர்.

இதன்போது பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அலரி மாளிகைக்கு முன்பாக பாரம்பரிய முறையிலான வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. 

இதேவேளை, பிரதமரின் தனிப்பட்ட ஊழியர்களும், பிரதமரின் வசம் உள்ள ஏனைய அதிகாரிகளும் அலரிமாளிகையை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






Gallery 

No comments