அலுவலகம் தாக்கப்பட்டது என வதந்திகளை பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை - முன்னாள் எம்பி சந்திரகுமார்.
கிளிநொச்சியில் உள்ள எனது அலுவலகம் மற்றும் வாகனம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருவதோடு, அவதூறுகளையும் சிலர் மேற்கொண்டு வருகின்றனர் எனவே இவர்கள் தொடர்பில் சட்டநடவடிக்கை எடுக்கவுள்ளேன் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக அரசியல், மற்றும் மக்கள் பணியில்ஈடுப்பட்டு வருகின்றேன், எனது செயற்பாடுகள் எப்படியானது என்பதனை மக்கள்
நன்குணர்ந்துள்ளனர். ஆனாலும் சில விசமிகள் குறுகிய அரசியல்
இலாபங்களுக்காக மக்கள் மத்தியில் முற்றிலும் உண்மைக்கு புறம்பான
தகவல்களை பரப்பி வருவதோடு, என் தொடர்பில் அவதூறு கருத்துக்களை
வெளியிட்டும் வருகின்றனர்.
எனவே இது தொடர்பில் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பொது மக்கள்
குழப்பமடையத் தேவையில்லை, இவ்வாறானவர்கள் தொடர்பில் விரைந்து
சட்டநடவடிக்கை மேற்கொள்ளவுள்ளேன்.
தற்போது அரசியல் அதிகாரத்திற்கு இல்லை என்றாலும்
கிளிநொச்சியில் எமக்கான மக்கள் ஆதரவு கடந்த காலத்தை விட அதிகரித்து வருகிறது.
தனியொரு தரப்பாக நின்று மக்களுக்கான எமது பணியினை மேற்கொண்டு
வருகின்றோம். அவசரகாலச் சட்டம் உள்ளிட்ட மக்களை பாதிக்கின்ற
நடவடிக்கைகளையும், மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளையும் எதிர்த்தும்,
கண்டித்தும் வந்திருகின்றோம். இதனை அண்மைய எமது ஊடக அறிக்கைகளில்
காணலாம். ஆனால் இதனையெல்லாம் அறிந்தும் தங்களுடைய குறுகிய அரசியல்
நோக்கங்களுக்காக சிலர் மக்களை குழப்பி வருகின்றனர். எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
Post a Comment