புகையிரத மற்றும் பேருந்து சேவைகள் தொடர்பில் வெளிவந்த தகவல்.
நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 7 மணிக்கு தளர்த்தப்பட்ட போதும், இன்று பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணிக்குப் பின்னர் களுத்துறைக்கும் வெயாங்கொடைக்கும் இடையில் சில புகையிரதங்கள் மாத்திரமே சேவையில் ஈடுபடும் என எதிர்பார்க்கப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனவே இது தொடர்பான தகவல்களை 1971 என்ற புகையிரத பயணிகள் சேவை இலக்கத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் முடிந்தளவு அதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு சாரதிகள் மற்றும் பேருந்து உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸ்லி ரணவக்க கூறுகையில், மாகாணங்களுக்குள் மாத்திரம் பேருந்து சேவைகளை வரையறைகளுடன் முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்டுள்ள காலப்பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவையை முன்னெடுக்கும் அளவுக்கு போதிய நேரம் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment