இராணுவ தளபதி விடுத்துள்ள விசேட அறிவித்தல்.
எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக நாடு முழுவதும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து வெளியேறும் எரிபொருள், நிரப்பு நிலையங்களுக்கு சரியான முறையில் சென்று சேர்ந்துள்ளதா என்பதை சரிபார்க்க கண்காணிப்பு வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் விசேட வழிகாட்டலின் கீழ் இராணுவம் இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளது.
கொலன்னாவ மற்றும் முத்துராஜவெல பிரதான எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு மேலதிகமாக, நாடு முழுவதும் 12 பெற்றோல் களஞ்சியங்கள் இயங்கி வருகின்றன.
Post a Comment