காலி முகத்திடலில் காட்சிப்படுத்தப்பட்ட இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய பதாகை.
காலி முகத்திடலில் நடைபெற்று வரும் போராட்டக் களத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பின் ஊடகவியலாளரான இசைப்பிரியாவின் புகைப்படம் தாங்கிய பதாகை காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியின் காரணமாக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் கொழும்பு காலி முகத்திடலில், ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக் களத்தில் இலங்கையில் கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களின் புகைப்படங்கள் தாங்கிய பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன.
எனினும், கடந்த சில தினங்களுக்கு முன்னர் அந்த பதாதைகள் அகற்றப்பட்டிருந்தன.
இறந்த ஊடகவியலாளர்களுக்கு நீதி கோரி இவ்வாறான பதாதைகள் வைக்கப்பட்டிருந்தன. அவை அகற்றப்பட்ட பின்னர் இன்று மீண்டும் குறித்த பதாதைகளை அங்கு வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இலங்கையில் நடந்த இறுதிக்கட்ட யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஊடகவியலாளர் இசைப்பிரியாவின் புகைப்படத்தை தாங்கிய பதாதையும் அங்கு வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment