அலரிமாளிகை வளாகத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை.
அலரிமாளிகை வளாகத்தில் மக்களால் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் பகுதியில் இன்றைய தினம் மக்களுக்கு இடையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலான பதாதையொன்றை நபரொருவர் இன்று காட்சிப்படுத்தியுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஏனைய மக்கள் குறித்த நபருடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராகவே தாம் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், இங்கு பொலிஸாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொலிஸாருடன் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு முறுகலை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டாம் எனவும் தெரிவித்து மக்கள் குறித்த நபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதேவேளை இவர் கோட்டாபயவின் ஆதரவாளரோ என்ற சந்தேகம் எழுவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் குறித்த நபர் இது தன்னுடைய உரிமை எனவும், தான் எவ்விடத்திலும் யாருக்கு எதிராகவேனும் போராட்டத்தில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் குறித்த நபரின் கையிலிருந்து பதாதை அவ்விடத்திலிருந்த ஏனைய ஆர்ப்பாட்டக்காரர்களால் பிடுங்கப்பட்டதுடன், அங்கு மக்களுக்குள் குழப்ப நிலையும் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அலரிமாளிகை வளாகப்பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட போராட்டமானது தொடர்ந்து எட்டாவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment