நாளை முதல் நாட்டில் ஏற்படவுள்ள எரிபொருள் தட்டுப்பாடு.
தமது பணிப்புறக்கணிப்பு காரணமாக நாட்டில் மீண்டும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி (பௌசர்) உரிமையாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
தாம் கோரும் 60% கட்டண திருத்தம் தமக்கு கிடைக்கவில்லை என்ற காரணத்தினால் நேற்று முதல் தனியார் எரிபொருள் தாங்கி ஊர்தி (பவுசர்) உரிமையாளர்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தநிலையில் எரிபொருள் போக்குவரத்து நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டதன் தாக்கம் நாளை முதல் உணரப்படும் என அவர் தெரிவித்துள்ளனர்.
அதிகரித்துள்ள எரிபொருள் விலையுடன் ஒப்பிட்டு போக்குவரத்துச் செலவுகளை மீளாய்வு செய்யத் தவறியமைக்கு எதிராக நேற்று நள்ளிரவு முதல் இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி ஊர்தி (பௌசர்) உரிமையாளர்கள் சங்கம் பணிகளில் இருந்து விலகிக் கொண்டது.
எனினும் நிலைமையை சமாளிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படும் என்று அமைச்சர் காஞ்சன விஜயரதன தெரிவித்துள்ளார்.
Post a Comment