Header Ads

test

அத்தியாவசிய சேவை தவிர்ந்த ஏனைய அரச சேவையாளர்கள் நாளை பணிகளுக்கு செல்லவேண்டாம் - பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை.

 அத்தியாவசிய சேவையை தவிர்ந்த ஏனைய அரச சேவையாளர்கள் நாளை பணிகளுக்கு செல்லவேண்டாம் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறையை கருத்திற்கொண்டு இந்த கோரிக்கையை விடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அரச பணியாளர்கள் நாளை பணிகளுக்கு செல்லவேண்டாம்: பிரதமர் ரணில் கோரிக்கை

அதேநேரம், நாளைய தினம் அவசியமற்ற பயணங்களை தவிர்க்குமாறும் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் வார இறுதியளவில் பெட்ரோல் விநியோகம் வழமைக்கு திரும்பும் என்றும், எதிர்வரும் ஜூன் மாதம் வரை பெட்ரோலுக்கு பிரச்சினையில்லை என்றும் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

No comments