Header Ads

test

அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

 அரச ஊழியர்களின் சம்பளத்தைக் குறைப்பது தொடர்பில் இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

எனினும் அரச நிறுவனங்களுக்கான செலவினங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளதாக நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விசேட சுற்றறிக்கை நிதி அமைச்சின் செயலாளரினால் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார அமைச்சில் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சுகாதார சன்ன ஜயசுமன நேற்று தெரிவித்திருந்தார். 

இதற்கு தீர்வு காணும் வகையில் புதிய வரவு செலவுத்திட்டம் தயாரிக்கப்பட வேண்டும் என அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 


No comments