Header Ads

test

காட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞனின் மரணத்தால் ஏற்பட்டுள்ள பரபரப்பு.

 பதுளை கெந்தகொல்ல யோதுன் உள்பத்த பகுதியை சேர்ந்த 19 வயதான இளைஞன் நேற்று மாலை கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆர்.எம். பசிது மஹேஷ் என்ற இளைஞனே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். வீட்டுக்கு அருகில் உள்ள காட்டில் மரம் ஒன்றில் கயிறு ஒன்றை பயன்படுத்தி கழுத்தில் சுருக்கிட்டு குறித்த இளைஞன் தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.

தற்கொலைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பாக பதுளை மற்றும் கஹடருப்ப பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments