Header Ads

test

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாக பிக்குகள் தலைமையிலான பேரணி.

 கொழும்பு தாமரை தடாகம் அரங்கத்திற்கு அருகில் இருந்து கொழும்பு கோட்டையை நோக்கி பேரணி ஒன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆர்ப்பாட்டப் பேரணி பௌத்த பிக்குகளை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் போலியான போராட்டங்கள் என்ற போர்வையில் சிங்கள பௌத்த மக்களின் நிலைப்பாட்டில் கை வைக்க வேண்டாம் என்ற தொனிப் பொருளில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு ஆதரவாக பிக்குகள் தலைமையிலான இந்த ஆர்ப்பாட்ட பேரணி நடத்தப்படுகிறது.

இந்த பேரணி தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் நடைபெறும் மக்கள் போராட்டத்தை நோக்கி செல்வதாக மக்கள் ஆர்ப்பாட்டத்தின் செயற்பாட்டாளர்களில் ஒருவரான உபுல் சாந்த சன்னஸ்கல தெரிவித்துள்ளார்.

பிக்குமார் தலைமையிலான பேரணியினர் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள இடத்தை நோக்கி சென்றால்,அங்கு மோதலான நிலைமை ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.


No comments